Home Featured உலகம் யூரோ: ஐஸ்லாந்து 2 – ஆஸ்திரியா 1; ஹங்கேரி 3 – போர்ச்சுகல் 3; அயர்லாந்து...

யூரோ: ஐஸ்லாந்து 2 – ஆஸ்திரியா 1; ஹங்கேரி 3 – போர்ச்சுகல் 3; அயர்லாந்து 1 – இத்தாலி 0; பெல்ஜியம் 1 – சுவீடன் 0;

539
0
SHARE
Ad

euro-iceland-austria

euro-hungary-portugal-score

euro-italy-republic ireland

#TamilSchoolmychoice

euro-sweden-belgium-score

பாரிஸ்:நேற்று நடைபெற்ற நான்கு ஆட்டங்களின் மூலமாக, இரண்டாவது சுற்றுக்கான மேலும் சில நாடுகள் தேர்வு பெற்றன.

போர்ச்சுகல் ஹங்கேரியுடன் சமநிலை கண்டாலும், போர்ச்சுகலின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமாக விளையாடி,  2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் போர்ச்சுகல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐஸ்லாந்தும் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐஸ்லாந்து இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தைச் சந்திக்கும்.

இத்தாலியை வெற்றி கொண்டதன் மூலம் அயர்லாந்தும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.

16 நாடுகள் பங்கு பெறும் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

euro-portugal-hungary-ronaldo2 கோல்கள் அடித்து போர்ச்சுகலைக் காப்பாற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ