இலண்டன் – இன்று ஜூன் 23ஆம் தேதி, பிரிட்டனின் வாக்காளர்கள் பொது வாக்கெடுப்புக்குச் செல்கின்றனர், அடுத்த அரசாங்கத்தையோ, நாடாளுமன்றத்தையோ தேர்ந்தெடுப்பதற்காக அல்ல!
பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம்…
மாறாக, ஐரோப்பிய யூனியன் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யத்தான் இன்று பிரிட்டன் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்கின்றனர்.
உலக அளவிலும், ஐரோப்பியக் கண்டத்திலும், உள்நாட்டிலும் பல்வேறு பொருளாதார அதிரடி மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் வரலாற்று பூர்வ நாள் இன்று!
அகில உலகமும் காத்திருக்கின்றது இன்றைய வாக்களிப்பின் முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கு!