சென்னை – பிரபல வெற்றிப்பட இயக்குநர் வெற்றிமாறனின் கனவுப் படமான ‘வடசென்னை’ – படத்தின் படப்பிடிப்புகள் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் மூன்று பாகங்கள் கொண்ட படமாக (Trilogy) ஆங்கிலப் பட பாணியில் படமாக்கப்படுகின்றது.
வட சென்னையில் வாழ்ந்த சில உண்மையான குண்டர் கும்பல் தலைவர்கள், தாதாக்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட பரிச்சயங்களின் அடிப்படையிலும், இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக வெற்றிமாறன் ஒருமுறை கூறியிருந்தார்.
வடசென்னையின் முதல்பாக படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.
வடசென்னை குண்டர் கும்பல் தலைவன் ஒருவனின் 30 ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களை வட சென்னை பதிவு செய்கின்றது.
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி இணையும் மூன்றாவது படம் வட சென்னையாகும்.