Home Featured நாடு குற்றச்செயல் தடுப்பு இயக்கத் தலைவர் ‘டத்தோ’ கைது!

குற்றச்செயல் தடுப்பு இயக்கத் தலைவர் ‘டத்தோ’ கைது!

489
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

கோலாலம்பூர் – மலேசியாவில் குற்றத் தடுப்புச் செயல்களுக்கு எதிராகப் போராடும் அரசு சாரா இயக்கம் ஒன்றின் தலைவரான – ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு அவர் நீலாய் வாகன சுங்கச் சாவடி அருகே கைது செய்யப்பட்டார். முப்பது வயதைக் கடந்த அவர் ஒரு சட்டவிரோத சூதாட்டக்காரரிடம் இருந்து ரொக்கப் பணம் பெற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த சட்டவிரோத சூதாட்டக்காரரை மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் கைது செய்யப்பட்ட நபர் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சூதாட்டத்தைக் காவல் துறைக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க கைது செய்யப்பட்ட நபருக்கு மாதா மாதம் பணம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.