Home Featured நாடு காருக்கு எண்ணெய் நிரப்புகையில் விபத்து: தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்!

காருக்கு எண்ணெய் நிரப்புகையில் விபத்து: தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்!

534
0
SHARE
Ad

Accidentகோலாலம்பூர் – கிளந்தானில் நேற்று தாயொருவர் காருக்கு பெட்ரோ நிரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், காருக்குள் அமர்ந்திருந்த அவரது 7 வயது சிறுவன், லைட்டரை வைத்து விளையாடியதில், தீப்பற்றி மிகப் பெரும் விபத்து நடந்துள்ளது.

கோல கிராய், கூச்சில் பகுதியிலுள்ள எண்ணெய் நிரப்பும் மையம் ஒன்றில் காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக ‘கொஸ்மோ’ மலாய் நாளேடு தெரிவித்துள்ளது.

அச்சிறுவன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து லைட்டரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவனது தாய் எண்ணெய் நிரம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனால் காருக்குள் தீப் பற்றி அச்சிறுவனின் உடலில் 15 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனது மகனை காருக்குள் இருந்து வெளியே எடுத்துவிட்ட அந்தத் தாய்க்கும் உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது அச்சிறுவன் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அவரது தந்தை இஸ்மாயில் டின் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிரப்பும் இடங்களில் செல்போன் பயன்பாடுகளே கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் மற்றவர்களுக்கும் பாடமாக அமைகின்றது.

குறிப்பாக, குழந்தைகளை காரில் வைத்துக் கொண்டு வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் இன்னும் கவனமாகவும், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.