Home Featured நாடு சஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவர் புகார் – காலிட் தகவல்!

சஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவர் புகார் – காலிட் தகவல்!

577
0
SHARE
Ad

Sanjeevanகோலாலம்பூர் – ‘மைவாட்ச்’ குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீசஞ்சீவனுக்கு எதிராக மேலும் மூவரும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவனால் பணம் கேட்டு தாங்கள் மிரட்டப்பட்டதாக அவர்கள் மூவரும் புகார் அளித்துள்ளதாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

“புகார் அளித்துள்ள அவர்கள் மூவரும் சாட்சியங்களாகக் கருதப்படுகின்றார்கள்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், சஞ்சீவன் மீது முதல் புகார் அளித்த அந்த சட்டவிரோத சூதாட்ட மைய நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தற்போது அது போன்ற திட்டம் இல்லை. அவரும் சாட்சியாகவே கருதப்படுகின்றார் என்று தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் நீதியைக் கண்டறிவது தான் எங்களது முதன்மை நோக்கம். யாரும் சட்டத்தை மீற முடியாது” என்று காலிட் கூறியுள்ளார்.