Home Featured உலகம் யூரோ: இத்தாலி 2 – ஸ்பெயின் 0; ஐஸ்லாந்து 2 – இங்கிலாந்து 1; ஸ்பெயினைப்...

யூரோ: இத்தாலி 2 – ஸ்பெயின் 0; ஐஸ்லாந்து 2 – இங்கிலாந்து 1; ஸ்பெயினைப் பழிவாங்கிய இத்தாலி – சிறிய நாட்டிடம் தோல்வி கண்டு வெளியேறும் இங்கிலாந்து!

719
0
SHARE
Ad

euro-italy-spain-score

euro-england-iceland-score

பாரிஸ்: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி தோற்கடித்து, பழிதீர்த்துக் கொண்டது. 2012ஆம் ஆண்டில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்து, வெற்றிக் கிண்ணத்தை அப்போது கைப்பற்றியது ஸ்பெயின்.

#TamilSchoolmychoice

அதற்குப் பழிவாங்கும் விதமாக நேற்றைய ஆட்டத்தில், இரண்டாவது சுற்றில் ஸ்பெயினைத் தோற்கடித்து, வெளியேற்றி, கால் இறுதி ஆட்டத்திற்கு இத்தாலி முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து வெளியேறிய பரிதாபம் – நிர்வாகி பதவி விலகினார்

பலம் வாய்ந்த குழுவாகத் திகழ்வதோடு, காற்பந்து உலகின் மிகச் சிறந்த விளையாட்டாளர்கள் சிலரையும் கொண்டிருக்கும் இங்கிலாந்து, சாதாரண, சிறிய நாடான ஐஸ்லாந்திடம் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அதிர்ச்சிகரமானத் தோல்வியைத் தழுவி இரண்டாவது சுற்றிலேயே ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறிய சோகமும் நேற்று நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து காற்பந்து குழுவின் நிர்வாகியான ரோய் ஹோட்சன், உடனடியாகத் தோல்விக்குப் பொறுப்பேற்று, பதவி விலகியுள்ளார்.

euro-england-iceland-players

இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்த உற்சாகத்தில் ஐஸ்லாந்து விளையாட்டாளர்கள்…