Home Featured தமிழ் நாடு சுவாதி படுகொலை: விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து ஏற்றது!

சுவாதி படுகொலை: விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து ஏற்றது!

736
0
SHARE
Ad

Swathi-chennai-girl-murderedசென்னை – இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமே முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.

சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி (24).

கடந்த ஜுன் 24-ம் தேதி, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில், மர்ம நபர் ஒருவர் அவரைப் படுகொலை செய்து தப்பிச் சென்றார்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை ஏற்று நடத்துவது குறித்து, இரயில்வே காவல்துறைக்கு, தமிழகக் காவல்துறைக்கும் இடையே, குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், நேற்று இவ்விசாரணை குறித்தும், காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தாமே முன்வந்து அவ்விசாரணையை ஏற்றது குறிப்பிடத்தக்கது.