Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை வழக்கில் திருப்பம் – பெங்களூர் சென்றது காவல் துறையின் தனிப்படை!

சுவாதி கொலை வழக்கில் திருப்பம் – பெங்களூர் சென்றது காவல் துறையின் தனிப்படை!

685
0
SHARE
Ad

Swathi-murder-chennaiசென்னை – கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நடத்திவரும் சென்னை காவல் துறையின் தனிப் பிரிவு தற்போது பெங்களூர் – மைசூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இன்போசிஸ் நிறுவனப் பணியாளரான சுவாதி சென்னையில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் பெங்களூரில் சில மாதங்கள் பயிற்சியில் இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தப் பின்னணி என்ன என்பது  குறித்தும், அங்கு அவருடைய நண்பர்கள் யாருக்காவது விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்ற வகையிலும் காவல் துறை அங்கு சென்றுள்ளது.

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் மைசூர்- கர்நாடகா மாநிலத்தில் உள்ள படுவா எனப்படும் பழங்குடி இனத்தவர் பயன்படுத்துவது என்பதால், கொலையாளி கர்நாடக மாநிலத்தவனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடும் காவல் துறை விசாரித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கொலையாளியின் புகைப்படத்தையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.