Home Featured நாடு “F1” – வாகன எண்: விலை 836,660; வாங்கியது ஜோகூர் சுல்தான்!

“F1” – வாகன எண்: விலை 836,660; வாங்கியது ஜோகூர் சுல்தான்!

752
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் வித்தியாசமான, ஒற்றை இலக்கங்களைக் கொண்ட வாகன எண்கள் ஏலத்தில் விடப்பட்டு, அதிக விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு அவை ஒதுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ‘F1’ என்ற எண் பல வகைகளிலும் சிறப்பு வாய்ந்ததாகும். உலக அளவில் முதல் நிலை கார் பந்தயத்துக்கான பெயர்தான் “எஃப் 1”.

Johor-sultan-440-x-215இந்த வாகன எண்ணுக்கு ரிங்கிட் 836,660 விலை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார் ஜோகூர் சுல்தான் (படம்). இந்த ஏலத்தின் விலை விவரங்களை  போக்குவரத்து அமைச்சின் வாகன எண் வழங்கும் பிரிவு வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர் சுல்தான் வாகன எண்ணை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, 2012ஆம் ஆண்டில் WWW1 என்ற வாகன எண்ணை 520,000 ரிங்கிட் விலையில் ஜோகூர் சுல்தான் ஏலத்தில் எடுத்துள்ளார்.

அப்போது அந்த விவகாரம் சர்ச்சையானது. இருப்பினும் அவர் தனது சொந்தப் பணத்தில்தான் அந்த வாகன எண்ணை வாங்கினார் என்றும், அதற்காக அரசாங்கப் பணம் பயன்படுத்தப்படவில்லை என்றும் ஜோகூர் சுல்தான் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதற்கிடையில், F என்ற இந்த வரிசையில் F2 என்ற வாகன எண் 514,800 ரிங்கிட் விலையில் ஏலம் விடப்பட்டது.

F3 என்ற வாகன எண் 344,300 ரிங்கிட்டுக்கும், F4 என்ற எண் 250,000 ரிங்கிட்டுக்கும் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.

‘F’ என்ற வரிசை கொண்ட வாகன எண்கள் புத்ரா ஜெயா வட்டாரத்தில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களுக்கான எண்களாகும்.

இதற்கிடையில், இனி கோலாலம்பூரில் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்கள் ‘V” என்ற வரிசையைக் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.