Home Featured உலகம் யூரோ: பிரான்ஸ் 5-2 கோல்களில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது!

யூரோ: பிரான்ஸ் 5-2 கோல்களில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது!

791
0
SHARE
Ad

euro-france-iceland-scoreபாரிஸ் : நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து  போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ் 5-2 கோல் எண்ணிக்கையில் ஐஸ்லாந்தை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியதன் வழி, அந்நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள்ளாகவே, பிரான்ஸ் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு,  4-0 என்ற அளவில் முன்னணி வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் ஐஸ்லாந்து கடுமையாகப் போராடினாலும், இரண்டு கோல்களை மட்டுமே அவர்களால் அடிக்க முடிந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை 5-2 என்ற நிலையில் முடித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

euro-france-iceland-playersபந்துக்காகப் போராட்டம் நடத்தும் பிரான்ஸ்-ஐஸ்லாந்து விளையாட்டாளர்கள்

இதனைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் ஜெர்மனியைச் சந்திக்கும்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் வேல்சைச் சந்திக்கும்.euro-semifinal-matches

அரையிறுதி ஆட்டங்களுக்கான அட்டவணை – குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.