Home Featured தமிழ் நாடு ராகுலுக்கு எதிராக அவதூறு: ஒய்ஜி.மகேந்திரன் கைதாகும் வாய்ப்பு!

ராகுலுக்கு எதிராக அவதூறு: ஒய்ஜி.மகேந்திரன் கைதாகும் வாய்ப்பு!

667
0
SHARE
Ad

YG.Mahendranசென்னை – நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்ஜி.மகேந்திரன்.

அவரது பேஸ்புக் பதிவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றிருப்பதால், அவதூறு பரப்பிய ஒய்ஜி.மகேந்திரனை காவல்துறைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுத் தலைவர் அஸ்லாம் பாட்ஷா சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

எனினும், அப்பதிவை தான் எழுதவில்லை என்று ஒய்ஜி.மகேந்திரன் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice