Home Featured தமிழ் நாடு வீசி எறியப்பட்ட நாய் என்னவானது? பிழைத்துக் கொண்டது!!!

வீசி எறியப்பட்ட நாய் என்னவானது? பிழைத்துக் கொண்டது!!!

958
0
SHARE
Ad

சென்னை – இன்று செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை மாற்றங்கள் குறித்த செய்திக்கு நிகராக அதிகமானோர் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த மற்றொரு செய்தி, ஒரு மனித மிருகம், ஒரு நாயை அடுக்குமாடி வீட்டின் உச்சியிலிருந்து கீழே வீசி எறிந்ததுதான்.

vlcsnap-2016-07-04-18h23m17s203கௌதம் என்ற அந்த மருத்துவத் துறை மாணவன் தலைமறைவாகி விட,  சென்னை காவல் துறையினர் அவனைத் தேடி வருகின்றனர்.

முதலில் அந்த நாயை கௌதம் என்பவன் வீசி எறிந்து கொன்று விட்டான் என்றுதான் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

#TamilSchoolmychoice

ஆனால், பின்னர் அந்த நாயைக் காயப்படுத்தினான் என தகவல் ஊடகங்கள் தங்களின் செய்தியைத் திருத்திக் கொண்டன.

இந்நிலையில், அந்த நாயின் நிலைமை என்ன என்பது குறித்து இந்த செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காத்திருந்தனர்.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி அந்த நாய் பிழைத்துக் கொண்டதாம்! அதன் கால்களில் மட்டும் அடிபட்டுள்ளதால், நொண்டிக் கொண்டு செல்கிறதாம்!

கெட்டியான ஆயுசு கொண்ட நாய்!!!