Home இந்தியா அனைத்துலக போர்க் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை காப்பாற்ற இந்தியா முயற்சி

அனைத்துலக போர்க் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை காப்பாற்ற இந்தியா முயற்சி

656
0
SHARE
Ad

UN-Logo-India-Flag-Sliderசென்னை,மார்ச் 18-ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து ஸ்ரீலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்தியாவின் டெக்கன் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை இந்தியா ஆதரிக்க வாய்ப்பில்லை.கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் நடந்த கூட்டத்தொடரில், குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகரமான, நடுநிலையான விசாரணைகளை இந்தியா வலியுறுத்திய போதும், அனைத்துலக விசாரணைக்கு அவ்வளவாக ஆதரவு  கொடுக்கவில்லை.  இந்த நிலையில், அமெரிக்காவின் தீர்மானத்தை திருத்துவது தொடர்பாக வாஷங்டனுடன் புதுடெல்லியுடன் தொடர்பு கொண்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர்,”இறுதிப்படுத்தப்படும் அமெரிக்கத் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கப்படும். புதன் அல்லது வியாழக்கிழமை அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.இறுதித் தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதனால்தான், இதுவரை இந்தியா எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு  எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலும், இலங்கைக்கு அதிருப்தி ஏற்படாத வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை திருத்தும் உத்தியை ஜெனிவாவில் இந்தியா செயல்படுத்தி வருவதாக தெரிகிறது.

#TamilSchoolmychoice

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா இந்த முறை பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.

எனினும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தொடர்ந்து அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், அமெரிக்காவின் தீர்மானத்தை பலவீனமாக்கும் உத்தியை மத்திய அரசு தயக்கத்துடன் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.