Home Featured கலையுலகம் மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” : முதல் தோற்றம் வெளியீடு!

மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” : முதல் தோற்றம் வெளியீடு!

909
0
SHARE
Ad

சென்னை – “ஓகே கண்மணி” படத்தின் மூலம் தொய்வு ஏற்பட்டிருந்த தனது படைப்பாற்றலை மீண்டும் நிரூபித்துக் காட்டிய பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படைப்பாக “காற்று வெளியிடை” என்ற படத்தை அறிவித்திருக்கின்றார்.

அந்தப் படத்தின் முதல் தோற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Kaatru veliyidai-mani rathnam new movie

#TamilSchoolmychoice

இந்தப் படத்தில் மணிரத்னத்திடம் முன்பு உதவி இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றிய கார்த்தி கதாநாயகனாக நடிக்கின்றார். இந்திப் படவுலகின் அழகிய நடிகைகளுள் ஒருவரான அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கின்றார்.

வழக்கம்போல் இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களுக்கு வைரமுத்து என மூவர் கூட்டணி இணைகின்றது. இந்த மூவரும் இணைந்தாலே படத்தின் பாடல்கள் ஒரு தனி மதிப்பைப் பெற்றுவிடுகின்றன என்பது திரையுலகின் எழுதப்படாத விதியாகும்.

இந்த முறை மணிரத்னத்தோடு ஒளிப்பதிவாளராக இணைவது ரவி வர்மன். இவர் முன்பு ஷங்கரோடு அந்நியன் படத்திலும், கே.எஸ்.ரவிக்குமாரோடு தசாவாதாரம் படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்திலும் தனது ஒளிப்பதிவுத் திறனைக் காட்டியவராவார். இந்தித் திரையுலகிலும் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்குபவர் இவர்.

மணிரத்னம் என்றாலே எதிர்பார்ப்புகள் எகிறுவது தமிழ்த் திரையுலகத்தின் வழக்கம்.

அத்தகைய எதிர்பார்ப்புகளை பாரதியாரின் அழகான கவிதை வரிகளைக் கொண்ட தலைப்போடு அறிவிக்கப்பட்டிருக்கும் ‘காற்று வெளியிடை’ ஏற்படுத்தியுள்ளது.