வாஷிங்டன் – அரசியல் பகையை மறந்து ஹிலாரி கிளிண்டனும், பெர்னி சாண்டெர்சும் நேற்று செவ்வாய்கிழமை, கூட்டணி அமைத்து தங்களது ஒரே எதிரியான டொனால்ட் டிரம்பை அதிபர் தேர்தலில் வீழ்த்துவது என்று முடிவெடுத்துள்ளனர்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி வெற்றியடைத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொள்ளப் போவதாக சாண்டெர்ஸ் நேற்று அறிவித்தார்.
“நான் ஏன் ஹிலாரி கிளிண்டனை அங்கீகரித்து, அவர் தான் நமது புதிய அதிபராக வர வேண்டும் என்று ஏன் நினைக்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்வதற்காக இங்கே வந்துள்ளேன். செயலாளர் கிளிண்டன் ஜனநாயகத்தின் வேட்பாளராக வெற்றியடைந்துள்ளார். நான் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேரணி ஒன்றில் ஹிலாரி கிளிண்டனுடன் கலந்து கொண்ட பெர்னி சாண்டெர் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், இரண்டு செனட்டர்களும் ஒன்றாக தோன்றியது, இதுவே முதல் முறையாகும்.