Home Featured கலையுலகம் வழக்கம்போல் ‘ஜோக்’ அடித்துக் கொண்டிருக்கும் கமல் – காலில் அறுவைச் சிகிச்சை!

வழக்கம்போல் ‘ஜோக்’ அடித்துக் கொண்டிருக்கும் கமல் – காலில் அறுவைச் சிகிச்சை!

949
0
SHARE
Ad

சென்னை – இன்று தனது ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் படிக்கட்டில் இறங்கும்போது தவறி விழுந்த நடிகர் கமலஹாசனுக்கு அவரது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும், பின்னர் வழக்கம்போல் அவர் நடப்பதற்கு 4 முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், கமலின் அண்ணன் சந்திரஹாசன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளளார்.

Kamalகமலுக்கு வேறு பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் உடலை முழுமையாக சோதித்துப் பார்த்ததில் (ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில்) அவர் முழுநலத்துடன் உள்ளார் எனத் தெரிவித்துள்ள சந்திரஹாசன், அவர் வழக்கம்போல் படுக்கையில் இருந்தபடி ஜோக் அடித்துக் கொண்டிருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்தில் இல்லம் திரும்பினாலும் அவர் தொடர்ந்து ஓய்விலும், சிகிச்சையிலும் இருந்து வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

#TamilSchoolmychoice

அவரது மனைவி கௌதமியும் மகள்களும் அருகிலிருந்து அவரை கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.