கெய்ரோ – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் மாண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் நட்பு ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
“பிரான்சின் நீசில் கொல்லப்பட்ட பிரஞ்சு சிலுவைப் போராளிகள் மற்றும் பாவப்பட்ட இஸ்லாமல்லாதவர்ககளின் எண்ணிக்கை 62-ஐத் தொட்டுவிட்டது. கடவுள் அற்புதமானவர்.. கடவுள் அற்புதமானவர்” என்று ஐஎஸ் ஆதரவு டுவிட்டர் பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.