Home Featured நாடு மகாதீரின் புதிய கட்சி அறிவிப்பிற்கு அன்வார் வரவேற்பு!

மகாதீரின் புதிய கட்சி அறிவிப்பிற்கு அன்வார் வரவேற்பு!

500
0
SHARE
Ad

Anwar ibrahimகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மொகிதின் (முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின்) முடிவிற்காகக் காத்திருக்கிறோம். காரணம் மொகிதின் தான் முடிவுகளை எடுக்கிறார்.”

“அவர்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்க்கிறோம். இது ஒரு நல்ல விசயம்” என்று இன்று மதியம் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, மகாதீருடன் பிகேஆர் தலைவர்கள் இணைந்து பணியாற்றுவது மிகவும் ஆபத்தானது என அன்வார் கடிதம் எழுதியிருந்தார்.

மலேசியாவைக் காப்பாற்றும் நடவடிக்கையின் மூலம் புதிய கட்சியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் மகாதீர் மொகமட் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.