Home Featured தமிழ் நாடு “எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை” – கமலின் நண்பர் ஜெய் சொல்லும் சுவாரசியத் தகவல்!

“எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை” – கமலின் நண்பர் ஜெய் சொல்லும் சுவாரசியத் தகவல்!

1056
0
SHARE
Ad

Kamal MGRசென்னை – உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது வீட்டில், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார்.

அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக நேற்று அவரது மூத்த சகோதரர் சந்திரஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில், கமலின் நெருங்கிய நண்பரும், உடற்பயிற்சியாளருமான ஜெயக்குமார், மக்கள் திலகம் எம்ஜிரையும், உலகநாயகன் கமல்ஹாசனையும் ஒப்பிட்டு சுவாரசியமான தகவல் ஒன்றைத் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

Olympia Jay

“மக்கள் திலகம் எம்ஜிஆர்.. உலக நாயகன் கமல் இருவருக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.
நாடக மேடையில் 100 கிலோவுக்கும் மேல் எடையிருந்த குண்டுமணி என்ற நடிகரை தோள்களுக்கு மேல் தூக்கி கீழே போடுவார் எம்ஜிஆர். இது நாடகம் நடக்கும் எல்லா நாட்களும் நடக்கும் காட்சி.”

“என்னது… அவ்வவளவு எடையை எம்ஜிஆர் தூக்கியிருப்பாரா? என்று யாராது சந்தேகித்தால் “அன்பே வா” படத்தை ஒரு முறை பாருங்கள். சுமார் 120 கிலோ எடையுள்ள பயில்வானை அசால்ட்டாக தூக்கி பந்து விளையாடுவார், ஜாக்கி சானே புகழ்ந்த மக்கள் திலகம்.”

“ஒருநாள் குண்டுமணியை தூக்கிய போது நாடக மேடை சரிந்ததால் எம்ஜிஆர் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தது. அவ்வளவுதான் எம்ஜிஆர் காலி.. இனிமேல் சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது என்று காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் ரகசியமாக கொண்டாட்டம் போட .. சிங்கம் கர்ஜித்து குதித்து வந்தது. தமிழ் திரை உலகை மொத்தமாகத் தன் வசப்படுத்தி “நட்சத்திர” உலகின் சக்கர்வர்த்தி ஆனார் இந்த ராமச் “சந்திரன்”.”

“நமது கமல்ஜிக்கு “கலைஞன்” படபிடிப்பில் இருமுறை அடுத்தடுத்து படபிடிப்பு கார் ஒன்று நிலைடுமாறி மோத தூக்கி எறியப்பட்டு “மிகப்பெரிய” உள் மற்றும் வெளிக் காயங்களுடன் இதே அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கமலை நேரில் பார்த்த போது அழுது விட்டேன்.”

“அவருடைய காயங்களின் அதி தீவிரத்தையும் அதிலிருந்து மீண்டு வர அவர் பட்ட சிரமங்ளையும் இன்றுவரை வெளியுலகம் அறியாது. கமல்ஜியின் தீவிர ரசிகர்கள் உட்பட.விளக்கமாக சொல்ல எனக்கு அனுமதி இல்லை. வருடத்தில் 300 நாட்கள் அவர் கூட தினமும் குறைத்ததது இரண்டு மணி நேரம் இருந்ததால் பல விஷயங்கள் பேசுவோம்.”

“கமல் மீண்டு வந்தார். காதல் இளவரசன்.. பெரு வளர்ச்சியோடு உலக நாயகன் ஆனார்.
இப்போதைய காயம் குணமாகி நார்மல் ஆக சில வாரங்கள் ஆகும். அதனாலென்ன? சிங்கத்தின் காலில் சிறு காயம். அவ்வளவுதான். சீற்றம் குறைந்திடாது. பிடரி மயிர் சிலிர்க்க பாய்நது வரும், நமது சிங்கமும் மிக விரைவில்.”

“இந்த விஷயத்தில் மக்கள் திலகமும் உலக நாயகனும் (Birds of the same feather.)
பின் குறிப்பு: எம்ஜிஆருக்கும் கமல்ஜிக்கும் உள்ள நெருக்கத்தையும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த பிரியமும் பலருக்குத் தெரியாது. அவை பற்றி பின்னொரு நாளில்.”

“இருவரும் தனிமையில் சந்தித்தால் மலையாளத்தில் உரையாடுவார்கள் என்ற ஒரு செய்தி மட்டும் இப்போது உங்களுக்காக.” – இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபல ‘எனர்ஜி’ உடற்கட்டு மாத இதழின் ஆசிரியருமான ஜெயகுமார் (ஒலிம்பியா ஜெய்), கமலுக்கு நெருங்கிய தோழர் என்பதோடு,  ‘ஆளவந்தான்’, ‘மருதநாயகம்’ என பல படங்களில் கமலுக்குப் பிரம்மாண்ட உடற்கட்டைக் கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Olympia Jay

(ஒலிம்பியா ஜெய்)

மேலும், ஜெயக்குமார், ‘சென்னை ஆணழகன்’, ‘தமிழ்நாடு ஆணழகன்’, ‘தென்னிந்திய ஆணழகன்’ உட்பட பல்வேறு ஆணழகன் பட்டங்களை வென்றவர்.

இந்தியாவின் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடங்களில் ஒன்றான திருப்பூரின் எனர்ஜி ஃபிட்னஸ் ஸ்டுடியோவின், ஃபிட்னஸ் டைரக்டராகவும் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: ஃபீனிக்ஸ்தாசன்