Home Featured கலையுலகம் கபாலி வழக்கு: 225 இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

கபாலி வழக்கு: 225 இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு!

649
0
SHARE
Ad

kabali-teaser-dialogueகோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 22 தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்ககோரி, கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் அனுமதியின்றி இயங்கும் 225 இணைய தளங்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.