சென்னை – வியாழக்கிழமை வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் கபாலி திரைப்படத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக உள்ளதாக இருப்பதாகக் கூறி, அத்திரைப்படம் வெளியாவதை தடை செய்யுமாறு தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
மேலும், கபாலி திரைப்படம் சட்டவிரோதமாக கூடுதல் காட்சிகள் திரையிட உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.