Home Featured நாடு வீட்டில் கொள்ளை: அதிர்ச்சியில் ‘டத்தோ’ மரணம்!

வீட்டில் கொள்ளை: அதிர்ச்சியில் ‘டத்தோ’ மரணம்!

578
0
SHARE
Ad

PatrolResponse-18கோலாலம்பூர் – தனது வீட்டில் கொள்ளை நடந்துள்ளதைப் பார்த்த ‘டத்தோ’ ஒருவர், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தொழிலதிபரான டத்தோ அப்துல் ஹாலிம் ஷா சலாமாட் ஷா (வயது 72), தனது மனைவியுடன் தாமான் புக்கிட் பந்தாயில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.

உள்ளே சென்று பார்த்த போது, மூன்று பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

அப்போது, மிகவும் அதிர்ச்சியடைந்த டத்தோ மூச்சுவிட சிரமப்பட்டதோடு, மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக பிரிக்பீல்ட்ஸ் ஓசிபிடி துணை ஆணையர் ஷாருல் ஓத்மான் மான்சோர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் 60,000 ரிங்கிட் ரொக்கமும், இதர பொருட்களும் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறை கூறுகின்றது.