Home Featured நாடு கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக இரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

536
0
SHARE
Ad

chaneasefastrainபுத்ராஜெயா –  மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து – சிங்கப்பூருக்கு அதிவேக இரயில் சேவை அமைத்தல் தொடர்பாக மலேசியா அரசாங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தரை பொதுப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சிங்கப்பூர் தரைப் போக்குவரத்து அதிகார சபை ஆகியவை கூட்டாக இணைந்து செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மலேசியப் பிரதமர் துறையைச் சேர்ந்த அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வான் ஆகிய இருவரும் இன்று அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்துள்ளது.

மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான இந்த அதிவேக இரயிலில் மொத்த 6 நிறுத்தங்கள் இருக்கும் என இருநாடுகள் சார்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சிரம்பான், ஆயர் கெரோ, மூவார், பத்து பஹாட் மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகிய இடங்களில் இந்த 6 நிறுத்தங்கள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.