Home Featured இந்தியா நவ்ஜோத் சிங்கின் மனைவி இன்னும் பாஜகவில் நீடிக்கின்றார்!

நவ்ஜோத் சிங்கின் மனைவி இன்னும் பாஜகவில் நீடிக்கின்றார்!

715
0
SHARE
Ad

navjot-singh-sidhu_புதுடில்லி – நேற்று இந்தியாவின் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள நவ்ஜோத் சிங் சித்து (படம்) தனது அடுத்த கட்ட நடவடிக்கையை இன்னும் அறிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கிடையில் அவரது மனைவி, நவ்ஜோத் கவுர் தான் இன்னும் பாஜக கட்சியின் பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நவ்ஜோத் சிங் ஆம் ஆத்மி கட்சியில் சேருவாரா என்ற அறிவிப்பை எதிர்பார்த்து புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வராக நவ்ஜோத் சிங் முன்னிறுத்தப்படுவார் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.