Home Featured நாடு “பழனிவேல் ஆதரவாளர்களுக்கு கதவுகள் திறந்திருக்கின்றன” – சுப்ரா!

“பழனிவேல் ஆதரவாளர்களுக்கு கதவுகள் திறந்திருக்கின்றன” – சுப்ரா!

581
0
SHARE
Ad

Subra-mic-cwc-19 july 2016

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கட்சிக்கு வெளியே இருக்கும் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்கள் திரும்பி வர விரும்பினால் அவர்களுக்காக கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினார்.

கட்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்வதற்கும், கட்சியிலும் இந்திய சமுதாயத்திலும் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கும் அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கட்சிக்கு வெளியில் இருக்கும் சில பிரிவினர் மீண்டும் மஇகாவில் இணைந்து கொள்ள பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில் சுப்ரா கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை நோக்கி சுப்ரா மீண்டும் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

(படவிளக்கம்: மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரா, அருகில்  தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி, தலைமைச் செயலாளர் சக்திவேல்)