இது குறித்து புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகத்தில் தேசிய காவல்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம் கூறுகையில், “அது அவரைப் பொருத்தது.. தான் தவறாக நடத்தப்படுவதாக அவர் நினைத்தால், காவல்துறையில் புகார் அளிக்கலாம். நாங்கள் விசாரணை செய்வோம். நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை சஞ்சீவன் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments