Home Featured இந்தியா விமானத்தைத் தேடும் பணியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்!

விமானத்தைத் தேடும் பணியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்!

915
0
SHARE
Ad

Indian Air force-AN 32-modelசென்னை – இன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை விமானம் ஒன்றைத் தேடும் பணியில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29 பேருடன் காணாமல் போன விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தினால், கடலுக்கடியில் விமானத்தின் சமிக்ஞைகள் ஏதாவது தென்படுகின்றதா என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்திய விமானப் படையின் ஏஎன்-32 (AN 32) ரக விமானம் சென்னையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு, அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் செல்லும் வழியில் காணாமல் போனது.

#TamilSchoolmychoice

விமானத்தைத் தேடும் பணியில் இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.

(படம்: ஏஎன்-32 ரக இந்திய விமானப் படை விமானம் – கோப்புப் படம்)