Home Featured கலையுலகம் உலகம் எங்கும் கபாலி! ரஜினி மட்டும் இன்னும் அமெரிக்காவில்!

உலகம் எங்கும் கபாலி! ரஜினி மட்டும் இன்னும் அமெரிக்காவில்!

673
0
SHARE
Ad

Rajini-USA-Ashramamசென்னை – உலகம் எங்கும் கபாலி படம் திரையிடப்பட்டு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பார்த்தபடி ரஜினிகாந்த் இன்னும் சென்னை திரும்பவில்லை.

ரஜினி இன்னும் அமெரிக்காவில்தான் தங்கி உள்ளார் என்றும், கபாலி ஆரவாரங்கள் அடங்கியவுடன் சென்னை திரும்புவார் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள சுவாமி சச்சிதானந்தாவின் ஆசிரமமான லோட்டஸ் ஆசிரமத்தில் ரஜினி தங்கியிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களாக இணையத் தளங்களில் உலவி வரும் மேலே காணப்படும் படத்தின்படி ரஜினி லோட்டஸ் ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.