Home Featured நாடு எம்எச்370 தேடுதல் பணி தற்காலிக நிறுத்தம் – லியாவ் தகவல்!

எம்எச்370 தேடுதல் பணி தற்காலிக நிறுத்தம் – லியாவ் தகவல்!

545
0
SHARE
Ad

Liow-Tiong-Laiபுத்ராஜெயா – எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிக்க சுமார் 120,000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவிற்கு தேடுதல் பணிகள் நடத்தியும், இதுவரை கண்டறிய முடியாமல் போனதால், தற்காலிகமாக அப்பணி நிறுத்தப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்கள் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி இம்முடிவை எடுத்துள்ளனர்.

எனினும் இம்முடிவு, “எம்எச்370 -ஐ தேடும் இப்பணி கைவிரிக்கப்பட்டது” என்று அர்த்தமில்லை எனக் குறிப்பிட்டுள்ள மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய், விமானத்தின் நம்பக்கூடிய வகையிலான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதனை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice