கோலாலம்பூர் – உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம், அம்முயற்சியின் ஒரு பகுதியாக ஆளில்லா விமானம் ஒன்றை இயக்கி சோதனை செய்து பார்த்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் வெளியிட்டுள்ள தகவலில், அக்யூலா என்ற எடை குறைந்த ஆளில்லா விமானம் அரிசோனா பாலைவனம் அருகே சோதனை செய்து பார்க்கப்பட்டது.சுமார் ஆயிரம் அடிகள் உயரத்தில் சுமார் 96 நிமிடங்கள் விமானம் வெற்றிகரமாக பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.