Home Featured உலகம் இளவரசர் ஜார்ஜ் பிறந்தாள் விழா: நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டியதால் சர்ச்சை!

இளவரசர் ஜார்ஜ் பிறந்தாள் விழா: நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டியதால் சர்ச்சை!

788
0
SHARE
Ad

Prince Georgeலண்டன் – இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியரின் மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு 3 வயது நிறைவு பெற்றதையடுத்து, அவரது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அவ்விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அதில் ஒரு படத்தில் ஜார்ஜ், வளர்ப்பு நாய் ஒன்றிற்கு ஐஸ்கிரீமும், சாக்லேட்டும் ஊட்டுவது போல் உள்ளது.

அதைக் கண்ட விலங்குகள் ஆர்வலர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளுக்கு பால் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், அதை ஊட்ட அனுமதித்த வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice