Home Featured கலையுலகம் டி.எச்.ஆர் ராகாவில் 20,000 ரிங்கிட் வரை அரிய வெல்லும் வாய்ப்பு!

டி.எச்.ஆர் ராகாவில் 20,000 ரிங்கிட் வரை அரிய வெல்லும் வாய்ப்பு!

745
0
SHARE
Ad

Selfie contestகோலாலம்பூர் – வானொலி வாயிலாகப் பல பாடல்களை ஒலியேற்றி இன்று வரை மக்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்திருக்கும் மலேசியாவில் முதன்மை நிலை வானொலி டி.எச்.ஆர் ராகா தங்களுடைய  ரசிகர்களைக் கவரும் வகையில் அவப்போது நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் ஏற்றி நடத்தி வருகின்றது.

அவ்வகையில் எதிர்வரும் 25-ஆம் தேதி திங்கட்கிழமை செல்ஃபி (தம்படம்) எனும் போட்டி ஒன்று ராகாவில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் டி.எச்.ஆர் ராகாவின் ரசிகர்கள் 20,000 ரிங்கிட் வரை வெல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

நட்பு ஊடகங்களை (Social Media) வலம் வரும் நபரா நீங்கள்? அல்லது செல்ஃபி (selfie) எடுப்பதை விரும்புவரா? ஆமாம் என்றால் ஒவ்வொரு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை டி.எச்.ஆர் ராகாவுடன் இணைந்து 20,000 ரிங்கிட் வரை மதிப்புள்ள ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைத் தட்டிச் செல்லுங்கள்.

#TamilSchoolmychoice

போட்டி விதிமுறை

இப்போட்டியில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் திங்கட்கிழமைத் தொடக்கம் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயா தொகுத்து வழங்கும் கலக்கல் காலை நிகழ்ச்சியில் மறவாமல் இணைந்து அவர்கள் இருவரும் அந்நாளுக்கான கருப்பொருள் (theme) கூறுவார்கள். அக்கருப்பொருளுக்குகேற்ப நீங்கள் ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலத்தளங்களாக இன்ஸ்டாகிராம் (Instagram) அல்லது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அச்செல்ஃபியைப் பதிவேற்றம் செய்யும் பொழுது #raagaselfie எனும் சொல்லை ஹேஸ்டேக் செய்ய மறவாதீர்கள்.

ஆக்கப்பூர்வமான செல்ஃபிகள் மட்டுமே இப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அச்செல்ஃபியிலுள்ள 3 தடயங்கள் (clues) அறிவிப்பாளர்கள் வழங்குவார்கள். 3 தடயங்கள் (clues) வழங்கிய பிறகு, அந்தச் செல்ஃபி உங்களுடையதாக இருந்தால் உடனே அழைத்தால் ரொக்கப் பற்றுச்சீட்டுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்புக் காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்போட்டி கலக்கல் காலை நிகழ்ச்சியில் மட்டுமின்றி ஹலோ நண்பா, ஹப்பார் மாலை மற்றும் இனிமை@ராகா நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும்.

அதை வேளையில், ‘கலக்கல் காலை’ நிகழ்ச்சியின் போது ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் வெற்றியாளர் இல்லை என்றால் அடுத்த ‘ஹலோ நண்பா’ நிகழ்ச்சியின் போது அந்த பரிசு தொகைப் பனி பந்தாகும் (Snow Balls). அதாவது, இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, சுரேஷ் நிகழ்ச்சி போது வெற்றியாளர் இல்லை என்றால் ‘ஹைப்பர் மாலை’ அந்தத் தொகையும் பனி பந்தாகும். அதைப் போன்று ‘ஹைப்பர் மாலை’ நிகழ்ச்சி போது வெற்றியாளர் இல்லை என்றால் அடுத்து வரும் ‘இனிமை@ராகா’ நிகழ்ச்சியில் அந்தத் தொகையும் பனி பந்தாக மாறும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமின்றால் எதிர்வரும் திங்கட்கிழமை 25-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை டி.எச்.ஆர் ராகாவுடன் இணைந்து இருங்கள்.

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.