Home Featured உலகம் ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி!

1030
0
SHARE
Ad

kabul-afghanistan-location mapகாபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஷியா ஹசாராஸ் இனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட வெடிவிபத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நேற்று பல இடங்களில் அரசாங்க அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்ததால், காயமடைந்தவர்களை அணுகுவதற்கும், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், மீட்பதற்கும் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)