Home Featured நாடு “நான் பினாங்கின் அடுத்த முதல்வரா?” இராமசாமி மறுப்பு!

“நான் பினாங்கின் அடுத்த முதல்வரா?” இராமசாமி மறுப்பு!

717
0
SHARE
Ad

ramasamy-next penang cmஜோர்ஜ்டவுன் – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் எதிர்நோக்கியிருக்கும் வழக்கு முடியும் வரை அவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்ளக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், அடுத்த முதல்வராக நடப்பு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நியமிக்கப்படக் கூடும் என சில தரப்புகள் கூறி வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் அடுத்த முதல்வர் இராமசாமி என்பதைக் குறிக்கும் பதாகைகளும் (போஸ்டர்களும்) வைக்கப்பட்டிருக்கின்றன. மேலே காணும் படம் பிரி மலேசியா டுடே இணையத் தளம் வெளியிட்டிருக்கும் படமாகும்.

இந்நிலையில் இராமசாமி “நான் அடுத்த முதல்வரில்லை. தேசிய முன்னணிக்கு ஆதரவான சில தரப்புகள் என்னையும் எனது கட்சியையும் சிண்டு முடிக்கும் வகையிலும், குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது சிறுபிள்ளைத்தனமானது” என சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

லிம் குவான் எங்கிற்கு பதிலாக இன்னொரு முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ள இராமசாமி, இதுபோன்ற வதந்திகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.