Home Featured உலகம் மூனிக் தாக்குதல் – ஐஎஸ் தொடர்பில்லை!

மூனிக் தாக்குதல் – ஐஎஸ் தொடர்பில்லை!

963
0
SHARE
Ad

munich-germany-locator-map

மூனிக் – நேற்று பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றும், அந்த சம்பவத்தை தனி ஒருவன் சொந்த மனக் கோளாறினால் நடத்திய தாக்குதல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான்.

#TamilSchoolmychoice

அந்தத் தாக்குதல்காரன் பேசியதாக ஜெர்மன் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று வெளியிட்ட காணொளியில் அவன் மனநோய்க்காக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவன் எனக் கூறியுள்ளான்.

“நான் ஒரு ஜெர்மானியன். நான் ஜெர்மனியிலேயே பிறந்தவன்” என்றும் அந்தத் தாக்குதல்காரன் அந்தக் காணொளியில் கூறியுள்ளான்.

munich-germany-attacker-ali sonobly

தாக்குதல் நடத்திய அலி சொன்போலி என்ற பெயர் கொண்ட பதினெட்டு வயது துப்பாக்கிக்காரன் – எந்த ஓர் இஸ்லாமிய இயக்கத்துடனும் அவனுக்குத் தொடர்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது…