Home Featured கலையுலகம் மலேசியாவில் மட்டும் கபாலி முடிவில் மாற்றம்!

மலேசியாவில் மட்டும் கபாலி முடிவில் மாற்றம்!

601
0
SHARE
Ad

Kabali-teaserகோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள குண்டர் கும்பல் பற்றிய கதையம்சம் கொண்ட படமான ‘கபாலி’ திரைப்படத்தில், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் படத்தின் முடிவுக் காட்சிகள் (கிளைமாக்ஸ்) மலேசியாவில் மட்டும் மாற்றியமைக்கப்படும் என்பதை மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹாலி ஹாமிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் படத்தின் முடிவை மாற்றியமைக்க அதன் தயாரிப்பாளர்கள் தரப்பிற்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்துல் ஹாலிம் மலாய்மெயில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தொலைப்பேசி வழியான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனவே, அதன் படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  உலகளவில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மலேசியாவில் மட்டும் மாற்றியமைக்கப்படவுள்ளன.

#TamilSchoolmychoice