Home Featured நாடு டத்தின் வோங் கொலை: தொழிற்சாலைப் பணியாளர் கைது!

டத்தின் வோங் கொலை: தொழிற்சாலைப் பணியாளர் கைது!

807
0
SHARE
Ad

Taman oug shootingகோலாலம்பூர் – கடந்த ஜூலை 6-ம் தேதி, தாமான் ஓயுஜியில் நடந்த தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங் கொலையில், தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஜோகூர் தம்போயில் வைத்து 29 வயதான அந்நபரைக் காவல்துறைக் கைது செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 8 பேருக்கு, தடுப்புக்காவலை நீடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோ அமர் சிங் இஸ்கார் சிங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

Comments