Home Featured தமிழ் நாடு இஸ்ரோ உதவியுடன் விமானப்படை விமானத்தைத் தேடும் பணி தீவிரம்!

இஸ்ரோ உதவியுடன் விமானப்படை விமானத்தைத் தேடும் பணி தீவிரம்!

668
0
SHARE
Ad

AN-32சென்னை – கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 29 பேருடன் மாயமான இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானத்தைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், விமானத்தைக் கண்டுபிடிக்க இஸ்ரோவின் உதவியும் நாடப்பட்டது.

அதன் படி, செயற்கைக்கோள் உதவியுடன் இஸ்ரோ நேற்று பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்போது தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

கிட்டத்தட்ட 16 போர்க்கப்பல்களும், 17 விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.