Home Featured உலகம் சீனா வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கி பெண் பலி (காணொளி)

சீனா வனவிலங்குப் பூங்காவில் புலி தாக்கி பெண் பலி (காணொளி)

579
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவில் உள்ள வனவிலங்குப் பூங்கா ஒன்றில் சுற்றுலா வந்த பெண் ஒருவரை அங்கிருந்த புலி இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்ற ஒருவரும் புலித் தாக்குதலுக்கு உள்ளாகி கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த போது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ள காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

காரில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள அப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் காரை விட்டு இறங்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் உள்ளன.

எனினும், சம்பவத்தின் போது, அப்பெண் காரிலிருந்து இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதயம் பலகீனமானவர்கள் இக்காணொளியைப் பார்க்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோம்:-

https://www.youtube.com/watch?v=j5AOi1kA4e0