ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக, கடந்த 1998-ம் ஆண்டு அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாகக் கடந்த 2006-ம் ஆண்டு கீழ்நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இந்நிலையில், 2007-ம் ஆண்டு சல்மான் கான் பதிவு செய்த மேல்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு இன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த இரு வழக்குகளில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டார்.
Comments