Home Featured இந்தியா 250 கிலோ எடை புலி மாயம் – தேடுதல் வேட்டையில் மகாராஷ்ட்ரா அரசு!

250 கிலோ எடை புலி மாயம் – தேடுதல் வேட்டையில் மகாராஷ்ட்ரா அரசு!

987
0
SHARE
Ad

புதுடெல்லி – மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள யுகேடபிள்யூஎஸ் (Umred Karhandla Wildlife Sanctuary) வனவிலங்குச் சரணாலயத்தைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட ‘ஜெய்’ என்ற புலி மாயமாகிவிட்டதால், அப்புலியைக் கண்டறிய அம்மாநில வனத்துறை மிகப் பெரிய தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளது.

Jai

(‘ஜெய்’ – படம் Chandan Gedam)

#TamilSchoolmychoice

அச்சரணாலயத்தில் ஜெய் மிகவும் பிரபலமான புலி என்று கூறப்படுகின்றது. அங்கு வரும் பார்வையாளர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் மிகவும் கம்பீரமாக காட்சிக் கொடுக்கும் அப்புலி கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தான் கடைசியாகக் காணப்பட்டுள்ளது.

அதன் பின்பு அப்புலியைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அதன் உடம்பில் இருந்த கருவியும் ( radio collar) கோளாறாகியிருப்பதால், புலியைக் கண்டறிவதில் வனத்துறை மிகவும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

இது குறித்து வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கன்திவார் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஜெய் எங்கிருக்கிறது என்பதை எண்ணி மிகவும் கவலையடைந்துள்ளோம். ஜெய்க்கு காலர் பொருத்திய இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானி பிலால் ஹபீப்பைத் தொடர்பு கொண்டுள்ளோம். பொதுவாக நிறைய இளம் புலிகள் வளரும் போது, மூத்த புலிகள் சண்டைகளைத் தவிர்க்க தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவர் புலிகளின் குணாதிசியங்களை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்.” என்று சுதிர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அப்புலியைக் கண்டறிய உதவுபவர்களுக்கு 50,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.