நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவர், தகுந்த பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனிடையே, ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும், இணைந்து படம் பார்க்கும் வகையில் சிறப்புக் காட்சி ஒன்று திரையிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கமல்ஹாசனுக்கு, இதற்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ரஜினி சென்னை திரும்பிவிட்டதால், கமலுடன் இணைந்து கபாலி சிறப்புக் காட்சி ஒன்றைப் பார்க்கவுள்ளதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.