Home Featured கலையுலகம் கபாலி சர்ச்சை: விமர்சகர் பிரஷாந்த் மலேசிய மக்களிடம் மன்னிப்பு!

கபாலி சர்ச்சை: விமர்சகர் பிரஷாந்த் மலேசிய மக்களிடம் மன்னிப்பு!

904
0
SHARE
Ad

Prashanthசென்னை – கபாலி திரைப்படத்தைப் பற்றி விமர்சித்த பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்தை, ரஜினி ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதில் மலேசிய ரசிகர்களும் அதிகமாகவே இருந்தனர்.

மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் அவர் விமர்சித்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அதற்கு அவர் மலேசிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதேநேரத்தில், தனது தனிப்பட்ட விசயங்களையும், குடும்பத்தையும், உடல் தோற்றத்தையும் ஏளனமாக விமர்சித்த பலருக்கு அவர் தக்க பதிலடியும் கொடுத்துள்ளார்.

“ஒரு படத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து, அதை விமர்சனம் செய்யக் கூட ஒருவருக்கு சுதந்திரம் தரவில்லை என்றால், நீங்க எந்த அளவிற்கு சரியாக இருக்கிறீர்கள்?” என்றும் பிரஷாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அண்மையில் வெளியான சென்னை28 பாகம் இரண்டு டீசரில் விமர்சகர்களைக் கிண்டல் செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் குறித்தும், அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

அதனை இங்கே காணலாம்: