Home Featured நாடு ஸ்தாப்பாக் சம்பவம்: கொலைகாரர்கள் இன்னும் மலேசியாவில் தான் உள்ளனர் – காலிட் தகவல்!

ஸ்தாப்பாக் சம்பவம்: கொலைகாரர்கள் இன்னும் மலேசியாவில் தான் உள்ளனர் – காலிட் தகவல்!

564
0
SHARE
Ad

KL24_270716_ POLIS_TEMBAKகோலாலம்பூர் – ஸ்தாப்பாக்கில் நேற்று 43 வயதான கண்ணன் என்ற கந்தசாமியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இன்னும் மலேசியாவிற்குள் தான் இருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எங்கும் போக முடியாது. அவர்களை விரைவில் வேட்டையாடுவோம்” என்று காலிட் இன்று பத்துமலை அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணம் கடன் கொடுக்கும் தொழில் நடத்தி வந்த கண்ணனுக்கு, தன்னை யாரோ பின் தொடர்வது முன்பே தெரிந்திருந்திருக்கிறது. அதனால் தான் அவர் இரு வாரங்களுக்கு முன்னர் புதிய காரை வாங்கியதாக அவரது நண்பர் ஒருவர் முன்னணி செய்தி இணையதளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (பெர்னாமா)