ஜாகர்த்தா – மூன்று வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு இந்தோனிசியா, வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இந்த நால்வரும் போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
பல மனித உரிமை இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் இந்தோனிசியா சற்றும் விட்டுக் கொடுக்காமல் இந்த மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் இந்தோனிசியா மரண தண்டனையை நிறைவேற்றியது. அதன்பின்னர் நேற்றுதான் அடுத்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நேற்று ஓர் இந்தோனிசியர் மற்று 3 நைஜிரியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக, மேலும் 10 பேர் இத்தகைய மரண தண்டனைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் பாகிஸ்தான், இந்தியா, ஜிம்பாப்வே ஆகிய நாட்டவர்களும் இந்தோனிசியர்களும் அடங்குவர்.
இந்தோனிசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒரு குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொல்லப்படுகின்றார்கள். இதற்கு, பல நாடுகளும், மனித உரிமை இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.