Home Uncategorized 2016 மிஸ் யுனிவர்ஸ் போட்டி பிலிப்பைன்சில் நடக்கிறது!

2016 மிஸ் யுனிவர்ஸ் போட்டி பிலிப்பைன்சில் நடக்கிறது!

852
0
SHARE
Ad

Pia-alonzo-மணிலா – 2016-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி பிலிப்பைன்சில் நடைபெறவுள்ளது வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, ஆசியா அரேனா வளாகத்தில் இப்போட்டி நடத்தப்படும் என பிலிப்பைன்ஸ் சுற்றுலாத்துறை செயலாளர் வாண்டா டியோ அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 2015-ம் ஆண்டிற்கான மிஸ். யுனிவர்ஸ் போட்டியில்,  பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்சோ வோட்ர்ஸ்பேக் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இதற்கு முன்பு கடந்த 1994-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஏற்று நடத்திய மிஸ்.யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சுஷ்மிதா சென் படத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.