Home Featured நாடு பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் செப்டம்பரில் அறிவிப்பு!

பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் செப்டம்பரில் அறிவிப்பு!

882
0
SHARE
Ad

zamriஈப்போ – துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்குப் பதிலாக, புதிய அவைத் தலைவர் எதிர்வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக அறிவிக்கப்படுவார் என பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடிர் (படம்) அறிவித்துள்ளார்.

அடுத்த அவைத் தலைவர் மஇகாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ வீரசிங்கம் என தகவல் ஊடகங்கள் சில ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.

“புதிய அவைத் தலைவராக யாரை நியமிப்பது என்ற ஒப்புதலை நான் தேசிய முன்னணி தலைவர் பிரதமர் நஜிப்பின் அங்கீகாரம் கிடைத்தபின் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ள ஜம்ரி புதிய அவைத்  தலைவர் மஇகாவைச் சேர்ந்தவரா என்பதையும் மேற்கொண்டு விவரங்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.