Home Featured உலகம் யானை வீசியெறிந்த கல் தாக்கி 7 வயது சிறுமி பலி!

யானை வீசியெறிந்த கல் தாக்கி 7 வயது சிறுமி பலி!

609
0
SHARE
Ad

Elephantராபாட் – மொராக்கோ தலைநகர் ராபாட்டிலுள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில், செவ்வாய்கிழமை அங்கிருந்த யானை ஒன்று 7 வயது சிறுமியின் மீது பெரிய கல் ஒன்றை வீசியெறிந்ததால், அவரது தலையில் பலத்த காயமடைந்து மரணமடைந்தார்.

வழக்கம் போல் சுற்றுலாப்பயணிகள் வந்து கொண்டிருந்த அந்த நாளில், யானையின் இருப்பிடத்திற்கு முன் அச்சிறுமி தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யானை வீசியெறிந்த பெரிய கல் ஒன்று சிறுமியின் பின்னந்தலையில் பலமாகத் தாக்கியுள்ளது. அதனையடுத்து, அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு அச்சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதன் பின்பு, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி மரணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், அவசர ஊர்தி வர மிகவும் தாமதமானதாகவும், அந்த மிருகக்காட்சி சாலையில் மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்றும் அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=1HmHrEW06bg