Home Featured நாடு தேசநிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ராயர் விடுதலை!

தேசநிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ராயர் விடுதலை!

860
0
SHARE
Ad

Rayer DAP Penangஜார்ஜ் டவுன் – தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் ராயருக்கு எதிராக அரசு தரப்பு தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் அவர் விடுவிக்கப்படுவதாக அமர்வு நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் ஒஸ்மான் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் காலை 9.30 மணியளவில் பினாங்கு சட்டமன்றத்தில் அவர் அம்னோ தலைவர்களை ‘செலாக்கா’ என்று கூறியதாக அவர் மீது தேசநிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.